இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

ஞாயிறு, 22 ஜூலை, 2012

ஆட்டோ நெம்பர்-எடிட்டபிள் நெம்பர் - MS Word 2003


எம்.எஸ்.வேர்ட் 2003 கோப்பில் ஆட்டோ நெம்பராக இருக்கும் டெக்ஸ்டை நாம் எடிட் செய்யும் நெம்பராக மாற்ற என்ன செய்ய வேண்டும்? வீடியோவில் இருக்கும் எம்.எஸ்.வேர்ட் கோப்பைப் பாருங்கள். அதிலிருக்கும் ஆட்டோ நெம்பர் டெக்ஸ்டை எடிட் செய்ய முடியாது?

கீழே கொடுத்திருக்கும் கோப்பை பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.


அது ஒரு நோட்பேட் டெக்ஸ்ட் கோப்புதான்.

பதிவிறங்கிய பிறகு அந்தக் கோப்பைத் திறந்து கொள்ளுங்கள்.

எம்.எஸ்.வேர்டில் ஆட்டோ நெம்பர் உள்ள ஏதாவதொரு கோப்பையும் திறந்து கொள்ளுங்கள்.


இப்போது எம்.எஸ்.வேர்ட்-ல் Tools>> Macro>> Macro செல்லுங்கள் அல்லது Alt+F8 பட்டன்களை ஒருசேர அழுத்துங்கள்.

Macro 1 என்று இருக்கும். அதன் வலதுபுறத்தில் Create என்று ஒரு பட்டன் இருக்கும். அதை அழுத்துங்கள்.

உடனே எம்.எஸ்.வேர்ட் 2003 Visual Basic editorல் ஒரு கோப்பைத் திறந்து காட்டும்.

அதில் உள்ள அனைத்தையும் Ctrl A கொடுத்து செலக்ட் செய்து Delete செய்துவிடுங்கள். இப்போது நீங்கள் பதிவிறக்கி திறந்து வைத்திருக்கும் நோட்பேடில் உள்ள டெக்ஸ்ட் அனைத்தையும் Ctrl A கொடுத்து செலக்ட் செய்து, Ctrl C கொடுத்து காப்பி செய்து, எம்.எஸ்.வேர்ட் விஷூவல் பேசிக் எடிட்டர் கோப்பில் Ctrl V கொடுத்து பேஸ்ட் செய்து சேமியுங்கள்.

விஷூவல் பேசிக் கோப்பு மறைந்துவிடும். மறையவில்லை என்றால் நீங்கள் அந்தக் கோப்பை மூடுங்கள். ஆனால் கண்டிப்பாக சேமித்துவிட்டு மூடுங்கள்.

இனி, மறுபடியும் Tools>> Macro>> Macro செல்லுங்கள் அல்லது Alt+F8 பட்டன்களை ஒருசேர அழுத்துங்கள். Auto number to general text என்று இருக்கும். அதை செலக்ட் செய்து வலப்புறத்தில் இருக்கும் Run என்ற பட்டனை அழுத்துங்கள். ஏதும் நடந்தது போல் தெரியாது. ஆனால்...

இப்போது உங்கள் ஆட்டோ நெம்பரைப் பாருங்கள். எடிட்டபிள் டெக்ஸ்டாக மாறியிருக்கும்.

இன்னும் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழுள்ள வீடியோவைப் பாருங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்தையும் சொல்லுங்க. முடிந்தால் மறுமொழி கொடுக்கிறேன்.