இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

வியாழன், 26 ஜூலை, 2012

வலைப்பூவில் இமேஜ் ஹைப்பர்லிங்க்

சில வலைப்பூக்களில் (பிளாகர்) பார்த்திருப்பீர்கள். ஒரு இமேஜைக் கெட்கெட்-ஆக இட்டிருப்பார்கள். அதைக் கிளிக் செய்தால் ஒரு வலைப்பூ பதிவு திறக்கும். அது எப்படி என்று ஒருவர் கேட்டிருந்தார். அதற்கான பதில் தான் இந்தப் பதிவு.

எந்த இமேஜை டிஸ்பிளே செய்ய வேண்டுமோ, அதைச் சரியாக சைஸ் செய்து (அநேகமாக 250 பிக்சல் அகலத்துக்குள்), Photobucketடிலோ Picasawebபிலோ அப்லோட் செய்துகொள்ள வேண்டும்.


பிறகு பிளாகர் அக்கவுண்டுக்குள் சென்று Layout பகுதிக்குள் சென்று Add Gadget சென்று HTML/Javascript Gadgetஐத் திறந்து கீழ்க்கண்ட Html Codeஐத் தேவையான திருத்தங்களுடன் உள்ளீடு செய்யவும்

<center>படத்திற்கு மேலே ஏதாவது டெக்ஸ்ட் வேண்டுமானல் இங்கு நிரப்பவும் <a href="http://www.hyperlinkcode.com"><img src="http://hyperlinkcode.com/images/sample-image.gif"></a> படத்திற்கு கீழே ஏதாவது டெக்ஸ்ட் வேண்டுமானல் இங்கு நிரப்பவும் </center>


மேற்கண்ட கோடில் வண்ணங்களில் இருப்பதை எடிட் செய்து உள்ளீடு செய்யவும். பச்சை வண்ணத்தில் இருக்கும் கோடை நீக்கி நீங்கள் படத்தை சொடுக்கினால் எந்தப் பக்கத்திற்குச் செல்ல வேண்டுமோ அந்த லிங்க்-ஐ அங்கே கொடுத்து, சிவப்பு வண்ணத்தில் இருக்கும் கோடை நீக்கி நீங்கள் படத்தை Upload செய்து வைத்திருக்கிறீர்களே அதன் டைரக்ட் லிங்க்-ஐ அங்கே கொடுத்து ஓ.கே. கொடுக்கவும்.


இன்னும் ஒரு முறையும் இருக்கிறது அது இன்னும் சிம்பிள்


இப்போது உங்கள் வலைப்பூவைப் பாருங்கள். படத்தைச் சொடுக்கினால் நீங்கள் கொடுத்திருக்கும் வலைப்பூ பக்கத்திற்குச் செல்லும்


மேற்கண்ட கோடில் சிறு தவறு ஏற்பட்டாலும் லிங்க் வேலை செய்யாது.

பிளாகர் அக்கவுண்டுக்குள் சென்று Layout பகுதிக்குள் சென்று Add Gadget சென்று Picture என்பதைக் கிளிக் செய்யுங்கள். Configure image என்று வரும் அதில் தேவையானவற்றை நிரப்பியும் மேற்கண்ட Effect-ஐ அடையலாம்.

1 கருத்து:

  1. என் வேண்டுகோளுக்கிணங்கி உடனடியாக பதிவில் வெளியிட்டமைக்கு நன்றி. செயல்படுத்தி பார்த்துவிட்டு தங்களை தொடர்பு கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தையும் சொல்லுங்க. முடிந்தால் மறுமொழி கொடுக்கிறேன்.