இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

வியாழன், 26 ஜூலை, 2012

பாக்கெட் சைஸ் புத்தகம் - கோரல்டிரா - வடிவமைப்பு


ராஜா என்ற ஒரு வாசக நண்பர் எனக்கு இப்படி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

//பேஜ் மேக்கரில் சில சந்தேகங்கள். அதாவது பாக்கெட் சைஸ்
புத்தகம் (கந்தசஷ்டி கவசம் போன்றவை) அச்சிட பேஜ் செட் அப் எப்படி செய்ய வேண்டும். பொதுவாக அனைத்து offset printer வைத்திருப்பவர்களும் பேஜ்மேக்கர் அல்லது கோரல் டிரா பயன்படுத்துகிறார்கள். கோரல் டிராவிலும் பேஜ் செட் அப் எப்படி செய்ய வேண்டும் எனத் தெரியப்படுத்துங்கள்.//

எனக்குப் பேஜ் மேக்கர் பற்றி அதிகம் தெரியாது. நான் அனைத்தையுமே கோரல் டிரா, போட்டோஷாப் மற்றும் எம்.எஸ். வேர்ட் மென்பொருட்களைப் பயன்படுத்தியே DTP செய்கிறேன். எனக்கு ஓரளவு தெரிந்த கோரல் டிராவில் இதை எப்படிச் செய்யலாம் என விளக்க முயல்கிறேன்.

ஒரு சின்ன பாக்கெட் சைஸ் புத்தகம் போட வேண்டும் என்றால் கோரல் டிராவைப் பயன்படுத்தி எப்படி Page Imposition (பேஜ் லேயவுட்) செய்வது.

A6 அளவு (டெம்மி சைசில் போடுகிறீர்கள் என்றால் 4.25 x 5.5 Inches)என்பது A4ல் (டெம்மி என்றால் 8.5 x 11ல்) 4 துண்டு வரும்.

A4ஐ இரண்டு மடிப்பு மடித்தால் A6 புக்லெட் 8 பக்கங்கள் வரும். ஆகையால் கோரல் டிராவில் A6 சைசுக்கு 8 தனித்தனி பக்கங்களைத் தொடர்ச்சியாக அமைத்துக் கொள்ளுங்கள்.

இப்படி எட்டு பக்கங்கள் படங்களுடனும் எழுத்துக்களுடனும் நிறைத்துக் கொள்ளுங்கள்.

இனி எப்படி லேயவுட் செய்வது?

Print Preview செல்லுங்கள்.

மேல் இடது மூலையில் பாயின்டருக்குக் கீழ் Imposition Layout tool என்று சிவப்பாக + குறியுடன் இருக்கும். அதைக் கிளிக் செய்யுங்கள்.

இப்போது, புத்தகத்தின் உள்ளிருக்கும் மேட்டர் தெரியாது. ஆகையால், மேலிருக்கும் சுட்டிகளில் Edit Basic Settings என்பதற்குப் பக்கத்தில் Template/Document Preview என்று ஒரு சுட்டி இருக்கும். அதைக் கிளிக் செய்யுங்கள். இப்போது உள்ளிருக்கும் மேட்டர் தெரியும்.

அப்படியே மேலேயே பாருங்கள். As in Document என்று இருக்கும். அதன் டிராப் டவுனை இறக்குங்கள். பல சுட்டிகள் இருக்கும். உங்கள் புக் லெடிற்கு சைட் பைண்டிங் என்றால் Side Fold card என்றத் தேர்வைத் தேர்வு செய்யுங்கள். இப்போது பாருங்கள் உங்கள் புக்லெட் தானாக இம்போஸ் ஆகிவிட்டது.

பார்த்தீர்களா? கோரல் டிரா நம் வேலையை எவ்வளவு சுலபமாகச் செய்கிறது என்று?

சில புக்லெட்டுகள் Top Bindingஆக வரும். அப்படி வரும் புக்லெட்டுகளுக்கு மேற்கண்டது போலவே பக்கங்களை ரெடி செய்து கொண்டு. Imposition layout toolல் Top Fold card தேர்ந்தெடுங்கள்.

அவ்வளவே... தேவையான தேர்வைச் செய்து கொண்டு Print this sheet தனித்தனி சிக்னேச்சர்களுக்கு தனித்தனியாகக் கொடுங்கள்.

உங்கள் புக்லெட் தயார்.

2 கருத்துகள்:

  1. Super. மிக அழகாக சொல்லிக் கொடுத்துவிட்டீர்கள். அதுவும் வீடியோவுடன். மிக மிக மிக நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகை தந்து கருத்துரை இட்டதற்கு நன்றி.

      நீக்கு

உங்கள் கருத்தையும் சொல்லுங்க. முடிந்தால் மறுமொழி கொடுக்கிறேன்.