இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

வெள்ளி, 20 ஜூலை, 2012

முடிக்குப் பின் இருக்கும் பேக்கிரவுண்டை எப்படி வெட்டுவது?

முடி கலைந்தாற்போல் இருக்கும் மேற்கண்ட படத்தில் பேக்கிரவுண்டை எப்படி வெட்டி எடுக்க முடியும்? (பேக்கிரவுண்டை வெட்டினால்தானே வேறு அழகான பேக்கிரவுண்டில் அந்த உருவத்தைக் கொண்டுவர முடியும். நீங்கள் வைத்திருப்பதுதான் அழகான பேக்கிரவுண்டா என்றெல்லாம் கேட்டுவிடாதீர்கள்) அதற்கான விடையாகத் தான் இந்தப் பதிவு இருக்கும்.

Photoshop CS4ல் செய்து காட்டியிருக்கிறேன். இன்னும் பொறுமையாகச் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். அடிப்படையை விளக்க இதுவே போதும் என்பதற்காகவும் கூடிய வரையில் வீடியோவை 10 நிமிடங்களுக்குள் அமைக்க வேண்டும் என்பதற்காகவும் கோடு மட்டும் போட்டுக் காட்டியிருக்கிறேன். மீதி ரோடு போட்டுக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை.

இதைக் கற்றுக் கொள்வதற்காக நான் பல வருடங்கள் முயன்றிருக்கிறேன். முடியாமல் அப்படியா Curve ஆகத்தான் வெட்ட முடிந்திருக்கிறது. இதைப் பழகப் பழக இன்னும் ஈசியாக இருக்கும். முதலில் குழப்பமாக இருந்தாலும், Practice பண்ண பண்ண இயல்பாக வந்துவிடும்.


இனி வீடியோவைப் பாருங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்தையும் சொல்லுங்க. முடிந்தால் மறுமொழி கொடுக்கிறேன்.