இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

செவ்வாய், 31 ஜூலை, 2012

மார்கி டூல் - போடாஷாப்


இந்தப் பதிவில் போடாஷாப்பின் முதல் டூலான Selection Tool (Marquee tool) பற்றித் தெரிந்து கொள்ளப் போகிறோம். உங்கள் கீபோர்டில் M என்ற எழுத்தைத் தட்டினால் இந்த டூல் செலக்ட் ஆகிவிடும்.

இந்த டூல் ஒரு இமேஜில் உள்ள ஒரு சிறு பகுதியையோ அல்லது பெரும்பகுதியையோ செலக்ட் செய்து அந்தப் பகுதியில் வேறு ஏதும் எபெக்ட் சேர்க்கவோ, அல்லது அந்தப் பகுதியை டெலீட் செய்யவோ உதவுகிறது.


டூல் பேலட்டில் முதலில் இருப்பதுதான் இந்த மார்கி டூல். இனி இந்த டூலை செலக்ஷன் டூல் என்றே குறிப்பிடுவோம்.

இந்த டூலில் முதலில் இருப்பது ரெக்டாங்குலர் செலக்ஷன் டூல். இதை வைத்து சதுரமான அல்லது ரெக்டாங்கிளான ஒரு பகுதியை செலக்ட் செய்யலாம்.

எந்தப் பகுதியை செலக்ட் செய்ய வேண்டுமோ அதன் மேல் இடது மூலையில் ஒரு கிளிக் செய்து அப்படி அடி வலது மூலைக்கு டிராக் செய்தால் நமக்குத் தேவையான பகுதி செலக்ட் ஆகிவிடும்.

செலக்ட் செய்த பகுதியை ரைட் கிளிக் செய்தால் பல ஆப்சன்கள் இருக்கும் அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பதை வீடியோவில் பாருங்கள்.

ரெக்டாங்குலர் செலக்ஷன் டூலுக்கு அடுத்த அடுக்கில் (அதே டூலில் கீழ் வலது மூலையில் சிறு முக்கோணம் இருக்கும். அதை சிறிது நேரம் அழுத்தினாலோ அல்லது மார்கி டூலை ரைட் கிளிக் செய்தாலோ) சர்குலர் செலக்ஷன் டூல் இருக்கும். ரெக்டாங்குலர் செலக்ஷன் டூல் செய்யும் எல்லா வேலைகளை இதுவும் செய்யும். ஆனால் நமது செலக்ஷனை சர்குலராக செலக்ட் செய்ய இது பேருதவியாக இருக்கும்.

இந்த இரு டூல்களில் எது ஒன்றாலும் ஒரு பகுதியை செலக்ட் செய்துவிட்டு, அப்படியே இன்வர்சாக செலக்ட் செய்ய வேண்டும் என்றால் Ctrl + Shift + I என்ற பட்டன்களை ஒரு சேர அழுத்தினால் நாம் செலக்ட் செய்திருந்த பகுதியைத் தவிர மற்ற அனைத்தும் செலக்ட் ஆகிவிடும்.

ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாததை ஒரு படம் சொல்லிவிடும். ஆயிரம் படங்கள் சொல்ல முடியாததை ஒரு வீடியோ சொல்லிவிடும்.

ஆகையால் கீழ்க்கண்ட வீடியோவைப் பாருங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்தையும் சொல்லுங்க. முடிந்தால் மறுமொழி கொடுக்கிறேன்.