இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

வெள்ளி, 20 ஜூலை, 2012

என்.எச்.எம் கன்வேர்ட்டர்

தமிழ் எழுத்துருக்கள் பல்வேறு வகைப்பட்டன. பல என்கோடிங்குகளில் தமிழ் எழுத்துருக்கள் கிடைக்கின்றன. ஒரு என்கோடிங்-ல் இருந்து இன்னொரு என்கோடிங்கிற்கு மாற்ற ஒரு மென்பொருள் தேவைப்படுகிறது. பல மென்பொருள்கள் கிடைத்தாலும் என்.எச்.எம். கன்வேர்ட்டர் சிறப்பானது.  என்.எச்.எம். ரைட்டர் எப்படியோ அதைப் போலவே, என்.எச்.எம். கன்வேர்ட்டரும் இலவசமாகவே கிடைக்கிறது. மென்பொருளைப் பதிவிறக்க இங்கே சொடுக்கவும்.

பதிவிறக்கம் செய்துவிட்டு, உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள். என்.எச்.எம். ரைட்டருக்குக் கொடுத்தது போல் பெரிய பதிவாக இட வேண்டாம் என்று எண்ணியும், ஏற்கனவே என்.எச்.எம். ரைட்டரை நிறுவ விளக்கியிருந்த பதிவைப் படித்தாலே இந்த மென்பொருளை நிறுவிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையிலும் வெறும் காணொளியை மட்டும் இங்கே இடுகிறேன்.


எப்படி கன்வேர்ட் செய்ய வேண்டும் என்பதற்கு கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும். Kneioc (Softview) எழுத்துருக்களை TAM வகை எழுத்துருக்களாக மாற்றம் செய்வது எப்படி? என்பதை விளக்கியிருக்கிறேன்.. Softview எழுத்துருக்களுக்கான XML கோப்பு அந்த மென்பொருளுடைனேயே வந்தாலும், அதில் சில குறைபாடுகள் உள்ளதால், நான் அதை எடிட் செய்து அந்த XML கோப்பை நீங்கள் பார்க்கப்போகும் வீடியோவிற்குக் கீழே கொடுக்கிறேன். அதைப் பதிவிறக்கிக் கொண்டு வீடியோவில் உள்ளவாறு நிறுவிக் கொள்ளவும்.

 

 Knieoc பதிவிறக்க.

1 கருத்து:

  1. இந்த பின்னூட்டத்தை NHM Writerரில்தான் எழுதினேன். இந்த மென்பொருளை தொடர்ந்து மூன்றாண்டுகளாகப் பயன்படுத்துகிறேன். பிடித்தாமான மென்பொருட்களில் ஒன்று.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தையும் சொல்லுங்க. முடிந்தால் மறுமொழி கொடுக்கிறேன்.