இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

சனி, 21 ஜூலை, 2012

மற்ற எழுத்துருக்களில் தட்டச்சு செய்ய!

என்.எச்.எம். ரைட்டரை நிறுவிவிட்டால். இணையத்தில், யூனிகோட் முறையில் தட்டச்சு செய்து விடலாம்.

ஆனால், பிரிண்ட் எடுப்பதற்காக நாம் தட்டச்சு செய்யும் கட்டுரைகள், யூனிகோட் முறையில் இருந்தால் அழகாக இருக்காது. அதற்காகத்தான் பல என்கோடிங்குகளில் பல தமிழ் எழுத்துருக்கள் இருக்கின்றன.

எனக்குத் தெரிந்தவரை தற்போது பிரபலமான தமிழ் எழுத்துருக்கள் செந்தமிழ் வகை, லாஸ்டெக்-ன் எல்.டி.வகை, மாடியூலர் இன்போடெக்கின் ஸ்ரீ வகை, சாஃப்ட் வியூவின் கா வகை, நான் இப்போது வரை சாஃப்ட் வியூவின் கா வகை எழுத்துருக்களையே பயன்படுத்துகிறேன்.

இப்படி மற்ற எழுத்துருக்களில் தமிழில் தட்டச்சு செய்ய (பெரும்பாலும் தமிழ் 99 முறையில்) தேவையான XML கோப்புகளை கீழே பதிவிறக்க கொடுத்திருக்கிறேன்.

பதிவிறக்கப்படும் ZIP ல் இருக்கும் கோப்புகள் கீண்டவாறு:
 1. Tamil_KnieocTAM_Tamil99 - Softview Ka வகை எழுத்துருக்களுக்கு தமிழ் 99 முறையில் தட்டச்சு செய்ய
 2. Tamil_Knieoc_Bamini - Softview Ka வகை எழுத்துருக்களுக்கு பாமினி (ஒரு வகை தட்டச்சு முறை) முறையில் தட்டச்சு செய்ய
 3. Tamil_LT_TM_Tamil99 - Lastech LT வகை எ.ழுத்துருக்களை தமிழ் 99 முறையில் தட்டச்சு செய்ய
 4. Tamil_SHREE_Tamil99 - Modular Infotech SHREE வகை எழுத்துருக்களை தமிழ் 99 முறையில் தட்டச்சு செய்ய
 5. Tamil_Tab_Arasan 1 - TAB வகை எழுத்துருக்களுக்கு அரசன் முறையில் தட்டச்சு செய்ய
தமிழ் 99 முறை

பாமினி முறை


போனெடிக் முறை


அரசன் முறை (வேண்டுமென்றால் மட்டும் பயன்படுத்தவும்)


 கோப்புகளைப் பதிவிறக்க10 கருத்துகள்:

 1. மரியாதைக்குரியவரே,வணக்கம்.தங்களது பதிவு மிக சிறப்பாக உள்ளது.சமூகத்ததிற்கு நல்ல விசயங்களை பதிவிட்டிருக்கும் தாங்கள் வாழ்க,தங்களது குடும்பம் நலமுடன் வளர்க...தங்களது பதிவால் கணினி வரைகலையில் நானும் சிறிதாவது அறிந்து கொள்ள ஆர்வம் பிறந்துள்ளது.எனparamesdriver // http://konguthendral.blogspot.com

  பதிலளிநீக்கு
 2. அருமை நண்பரே... பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி

  இந்த முறையை பயன்படுத்தி அதாவது என்.ஹெச்.எம் ரைட்டரை பயன்படுத்தி போட்டோசாப் மென்பொருளில் தட்டச்சு செய்ய முடியுமா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போட்டோஷாப் மட்டுமல்ல நண்பரே. தட்டச்சு, வடிவமைப்பு சார்ந்த அனைத்து மென்பொருள்களிலும் இந்த என்.ஹெச்.எம். ரைட்டர் இயங்கும்.

   நீக்கு
 3. உடன் பதிலுக்கு மிக்க நன்றி நண்பரே..

  முயற்சி செய்து பார்த்தேன். டைப் செய்ய முடிகிறது.
  நான் டைப்பரைட்டர் முறையிலும் வேகமாக இல்லாவிட்டாலும் மெதுவாக டைப் செய்வேன். 99 முறை எளிதாக இருக்கும் என்று அதை கற்றுக்கொண்டேன். அதன் பிறகு டைப்ரைட்டர் முறை பழக்கம் விட்டு போய்விட்டது. உங்கள் உதவியால் எனக்கு நன்கு பழக்கமான 90 முறையில் டைப் செய்ய முடிகிறது. மிக்க நன்றி மற்றும் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. TAM 99 முறையே கணினியில் தட்டச்சு செய்ய சிறந்த முறையாகும். அதை நீங்கள் பயில இந்தப் பக்கம் உதவி செய்ததை அறிந்து மகிழ்கிறேன்.

   உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே

   நீக்கு
 4. செந்தமிழ் தமிழ் பாண்ட் 99 முறையில் டைப் செய்ய xml ஃபைல் இருக்கிறதா நண்பரே. இருந்தால் அதன் லிங்க் ப்ளீஸ்...

  என்றும் நட்புடன்
  தமிழ்நேசன்

  பதிலளிநீக்கு
 5. தொந்தரவிற்கு மன்னியுங்கள் நண்பரே.

  செந்தமிழ் எழுத்துருவுக்கு தமிழ்99 முறையில் தட்டச்சு செய்ய எக்ஸ்.எம்.எல் கோப்பு இருந்தால் லிங்க் கொடுத்து உதவுங்கள்.

  தமிழ்நேசன்

  பதிலளிநீக்கு
 6. இல்லை நண்பரே. செந்தமிழ் எழுத்துருவுக்கு பாதி அளவுக்கு எக்ஸ் எம் எல் செய்து வைத்திருந்தேன். இன்னும் முடியவில்லை.

  பதிலளிநீக்கு
 7. நல்லது நண்பரே. முழுமையாக முடிந்தவுடன் இங்கு பின்னூட்டத்தில் தெரியப்படுத்தினால் மிகமகிழ்வேன். அட்வான்ஸ் நன்றிகள்

  என்றும் நட்புடன்
  தமிழ்நேசன்

  பதிலளிநீக்கு
 8. நண்பருக்கு வணக்கம்..
  செந்தமிழ் எழுத்துருக்களை 99 முறையில் டைப் செய்வதற்கான எக்.எம்.எல் பைல் தயாரித்துவிட்டீர்களா.. தயார் செய்து வைத்திருந்தால் அதை கொடுத்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.. எனக்கு 99 முறை மட்டுமே டைப் செய்ய வருகிறது. அந்த முறையில் செந்தமிழ் எழுத்துருக்களை பயன்படுத்த ஆசை,விருப்பம். தாங்கள் உதவினால் செந்தமிழ் எழுத்துருக்களை பயன்படுத்த உதவியாக இருக்கும்.. எப்போது செந்தமிழ் எழுத்துருக்கான எக்.எம்.எல் கோப்பு தயாரானாலும் அதை மறக்காமல் பகிர வேண்டுகிறேன்..காத்திருக்கிறேன்..
  எனது மின்னஞ்சல் முகவரி
  newtamilnesan@gmail.com

  என்றும் நட்புடன்
  தமிழ்நேசன்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்தையும் சொல்லுங்க. முடிந்தால் மறுமொழி கொடுக்கிறேன்.