இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

ஞாயிறு, 22 ஜூலை, 2012

தோல் தரத்தை ஸ்மூத் ஆக்க

இந்த திரிஷாவின் படத்தை போட்டோஷாப் மென்பொருளைப் பயன்படுத்தி தெளிவாக்கி தோலை ஸ்மூத் செய்யப் போகிறோம்.

போட்டோஷாப் சிஎஸ்4ல், Curves, Unsharp Mask, Gaussian Blur, Eraser டூல்களைப் பயன்படுத்தி இந்தப் பணியைச் செய்யப் போகிறோம்.

ஓரளவு செய்திருக்கிறேன் என்று எண்ணுகிறேன்.

இன்னும் தெளிவாகச் செய்திருக்கலாம். ஆனால் நேரமின்மையால் அவசரமாகப் பதிவு செய்யப்பட்ட வீடியோ இது.

இனி வரும் பதிப்புகளில் இன்னும் தெளிவாகத் தர முயல்கிறேன்.


முதலில் படத்தை இருமுறை டூப்ளிகேட் செய்து கொள்ளவும்

பிறகு முதல் மற்றும் இரண்டாவது லேயரில் உள்ள படத்தை Curves, Brighness தனித்தனியாகச் செய்து கொள்ள வேண்டும்.

இரண்டாவது லேயரில் உள்ள படத்தை Filter-ல் உள்ள Sharpen - > Unsharp Mask பயன்படுத்தி ஷார்ப் செய்து கொள்ள வேண்டும்

முதல் லேயரில் உள்ள படத்தை Filter-ல் உள்ள Blur - > Gaussian Blur பயன்படுத்தி Blur செய்து கொள்ளவும்.

Eraser டூலில் Hardness 0% செட் செய்து கொண்டு ஷார்ப் செய்த லேரில் உள்ள தோல் பகுதியை மட்டும் தேவையான அளவுக்கு இரேஸ் செய்து கொண்டால் படம் பார்ப்பதற்குத் தெளிவாக இருக்கும்.

கீழ்க்கண்ட வீடியோவைப் பார்த்தால் இன்னும் தெளிவாகப் புரியும்
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்தையும் சொல்லுங்க. முடிந்தால் மறுமொழி கொடுக்கிறேன்.