இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

செவ்வாய், 31 ஜூலை, 2012

கோரல் டிராவைப் பயன்படுத்தி வரைதல்


கோரல் டிராவைப் பயன்படுத்தி ஒரு ஓவியத்தை வரைவது எப்படி என்பதை இந்தப் பதிவில் எடுத்துக் கொள்கிறோம்.

இந்த உதாரணத்தில் நாம் எடுத்துக் கொண்டிருப்பது ஒரு பத்திரிகையில் இருந்து ஸ்கேன் செய்த ஒரு பிள்ளையார் படம்.

படத்தைக் கூர்ந்து கவனியுங்கள். அதன் பிக்சல்கள் சிதறியிருக்கும். நாம் அதை டிரேஸ் செய்வது போல் அதன் மேலேயே கோரல்டிராவைப் பயன்படுத்தி வரைந்தால் இந்த பிக்சல்கள் இருக்காது. மேலும் ஒரு ராஸ்டர் இமேஜை வெக்டர் இமேஜாக ஆக்கப் போகிறோம்.


ராஸ்டர் இமேஜூகளைப் பெரிதாக்க பெரிதாக்க அதன் பிக்சல்கள் மேலும் சிதறி படம் நன்றாக இராது. ஆனால் அதை வெக்டராக மாற்றிவிட்டோமேயானால் அந்த வெக்டர் இமேஜை எவ்வளவுப் பெரிதாக்கினாலும் சிதறாது.

இந்த உதாரணத்தில் முழுவதும் கோரல் டிராவின் 3 பாயின்ட் கேர்வ் டூலைப் பயன்படுத்தி வரைந்திருக்கிறேன். இதை பிசேர் டூலை வைத்தும் வரைந்து கொள்ளலாம்.

படம் முழுவதும் வரைந்த பிறகு இப்படி இருக்கும்.

குறிப்பு: சரியாக அதேப் போல் டிரேஸ் செய்ய வேண்டும் என்பதில்லை. நமக்கு எங்கங்கு நீட்டி சுருக்க வேண்டுமோ, அங்கங்கு நீட்டி சுருக்கி வரைந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

கீழே உள்ள காணொளியைப் பார்ப்போமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்தையும் சொல்லுங்க. முடிந்தால் மறுமொழி கொடுக்கிறேன்.