இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

வியாழன், 19 ஜூலை, 2012

என்.எச்.எம். ரைட்டர் நிறுவுவது எப்படி?

இதற்கு முன்பு இட்டிருந்த பதிவில் உள்ள சுட்டியைப் பயன்படுத்தி என்.எச்.எம். ரைட்டரை பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.

படத்தில் உள்ளவாறு (இந்தக் கட்டுரையில் வரும் ஒவ்வொரு படமும் கிளிக் செய்தால் பெரிதாகத் தெரியும்) டவுன்லோடு ஆனவுடன்.

விண்டோஸ் 7ஆக இருந்தால் ரைட் கிளிக் செய்து Run as administrator option-ஐத் தேர்ந்தெடுங்கள்

XPயாக இருந்தால் டபுள் கிளிக் செய்யுங்கள்.


படத்தில் உள்ளபடி நெக்ஸ்ட் கொடுங்கள்.
ஐ அக்செப்ட் கொடுங்கள்.

நெக்ஸ்ட் கொடுங்கள்

படத்தில் உள்ளபடி Tamil ஐ தேர்ந்தெடுத்து நெக்ஸ்ட் கொடுங்கள்.

நெக்ஸ்ட் கொடுங்கள்.

நான் Quick launch மட்டும் தேர்ந்தெடுத்திருக்கிறேன். உங்கள் தேவைக்கேற்ப டிக் கொடுத்து நெக்ஸ்ட் பட்டனை அழுத்தவும்.

இன்ஸ்டால் பட்டனை அழுத்துங்கள்.
launch NHM Writerஐ தேர்வு செய்து Finish பட்டனை அழுத்துங்கள்.

அவ்வளவுதான் NHM Writerஐ நிறுவி விட்டோம். இப்போது அந்த மென்பொருளே தானாக இயங்கி உங்கள் டிரே பகுதியில் ராக்கெட் வடிவில் இருக்கும்

ராக்கெட் வடிவத்தில் கீழே வலது ஓரத்தில் நேரம் ஓடும் இடத்தில் இருக்கிறது பாருங்கள்

கீழே காணும் ராக்கெட்டை (NHM Iconஐ)  ஒரு முறை லெப்ட் கிளிக் (Left Click) செய்யுங்கள். யூனிகோட்டில் எத்தனை முறைகளில் தட்டச்சு செய்யலாம் என்ற பட்டியல் இருக்கும் Alt + 1ல் தமிழ் 99 முறையின் படி தட்டச்சு செய்யலாம். Alt+2 தங்கிளிஷ் (Phonetic என்று சொல்கிறார்கள்) முறையில் தட்டச்சு செய்யலாம் (i.e. ammaa = அம்மா). இந்த முறையைத் தான் பல பேர் விரும்புவார்கள். ஆனால் தமிழ் 99ல் பழகுவதுதான் விரைவாக தட்டச்சு செய்ய வழி வகுக்கும். Alt+3ல் பழைய டைப் ரைட்டர் மிஷினில் உள்ளது போல் தட்டச்சு செய்யலாம். Alt+4ல் புதிய பாமினி வகை தட்டச்சு. Alt+5 பற்றி எனக்கு அதிகம் தெரியாது. அதுவும் Phonetic வகையைச் சார்ந்தது போல்தான் தெரிகிறது.

MS Wordல் தட்டச்சு செய்ய, முதலில் வேர்டை ஓப்பன் செய்யுங்கள். வேர்ட் ஓப்பன் ஆன பிறகு ஆல்ட் பட்டனைப் பிடித்துக் கொண்டே நம்பர் 1ஐ (மேற்கண்ட முறைகளில் உங்களுக்கு எது பிடித்தமானதோ அந்த நம்பரை அழுத்துங்கள்) அழுத்துங்கள். பிறகு தட்டச்சு செய்ய ஆரம்பியுங்கள்.இப்போது தமிழில் தட்டச்சு செய்து கொண்டிருப்பீர்கள்.

மேற்கண்ட இவ்வளவு விளக்கமும் புரிய வில்லையா? பரவாயில்லை கவலைப்படாதீர்கள். (ஒவ்வொரு படத்தையும் தன்னித்தனியாக கிளிக் செய்தால் பெரியதாகத் தெரியும்.)

கீழ்க்கண்ட வீடியோவைப் பாருங்கள் .

இந்த வீடியோவில் வேர்டில் தட்டச்சு செய்வது எப்படி என்று காண்பித்திருக்கிறேன். அதை அப்படியே உங்கள் பிரவுசருக்கும் பயன்படுத்தாலம். கூகுளில் தமிழில் தேட அதே முறையைப் பின்பற்றலாம். உங்கள் பிரவுசரை ஓப்பன் செய்துகொண்டு கூகுள் தளத்தில் சென்ற பிறகு, மேற்கண்ட முறைகளில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து தட்டச்சு செய்யலாம்.

2 கருத்துகள்:

 1. பேஸ்புக்கில் எவ்வாறு தமிழில் கொமாட் கொடுப்பது?

  பதிலளிநீக்கு
 2. நண்பரே!

  மேலே MS Wordல் தட்டச்சு செய்வது எப்படி என்று காட்டப்பட்டுள்ளது.

  அதேபோலத்தான் முகநூலிலும் (Facebookக்கிலும்) தட்டச்சு செய்ய வேண்டும்.

  இந்த என்.எச்.எம். ரைட்டரைக் கொண்டு எல்லா மென்பொருள்களிலும், மற்றும் எல்லா இணைய உலாவிகளிலும் தட்டச்சு செய்யலாம்.

  நன்றி.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்தையும் சொல்லுங்க. முடிந்தால் மறுமொழி கொடுக்கிறேன்.