இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

பேக்கிரவுண்ட் இரேசர் வைத்து முடியை வெட்டுவது எப்படி?

இந்த ஐஸ்வர்யா ராய் படத்தில் உள்ள பேக்கிரவுண்டை முடியின் தன்மை கெடாமல் (முழுமையாக அல்ல. எப்படி எடுத்தாலும் சிறு அளவில் தன்மை கெடத்தான் செய்யும். ஏனென்றால் படத்தில் உள்ள டீட்டெய்ல்களை நாம் அழிக்கின்றோம்.) பேக்கிரவுண்ட் இரேசர் டூல் பயன்படுத்தி எப்படி வெட்டி எடுப்பது என்பது குறித்தத் தான் இந்தப் பதிவு. இந்தப் பதிவின் படி செயல்முறைகளைக் கடைப்பிடித்தால் கீழ்க்கண்டவாறு வேறு பேக்கிரவுண்டில் படம் அழகாகப் பொருந்தும்படி முடியின் தரம் கெடாமல் நகர்த்தி வைக்க முடியும்.
செயல்முறை:

முதலில் தட்டையாக (Flattened) இருக்கும் பேக்கிரவுண்டை லேயராக மாற்ற வேண்டும். E என்ற பட்டனை அழுத்தி இரேசர் டூலை செலக்ட் செய்ய வேண்டும். அதன் ஹார்ட்னெஸ் லெவல் 100 இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பிறகு முடிந்த வரை முடிக்கு நெருக்கமாக பேக்கிரவுண்டை இரேசர் டூல் கொண்டு அழிக்க வேண்டும்.

புதிய லேயர் ஒன்றை உருவாக்கி, அந்த லேயரில் சாலிட் கலராக ஏதாவதொரு டார்க் கலரை ஃபில் செய்து அதை ஐஸ்வர்யா லேயருக்கு அடியில் இழுத்துப் போட வேண்டும்.. இனி ஐஸ்வர்யா இருக்கும் லேயரை செலக்ட் செய்து கொண்டு, Shift + E கொடுத்து இரேசர் டூலுக்கு அடியில் இருக்கும் பேக்கிரவுண்ட் இரேசர் டூலை செலக்ட் செய்ய வேண்டும். 
அந்த டூலைப் பயன்படுத்தி எந்தக் கலர் தேவையில்லையோ அந்த கலரில் முதலில் அழுத்தி அப்படியே வைத்து டிராக் செய்ய வேண்டும். ஆகா என்ன அற்புதம் பேக்கிரவுண்ட் மட்டுமே அழிகிறது. முடி அழியவில்லை.
மேலும் இந்தப் பதிவு விளக்காததை கீழ்க்கண்ட வீடியோ விளக்கும்.

2 கருத்துகள்:

 1. வணக்கம்,

  அருமையான பதிவு நானும் இதற்கென மெனக்கெட்டு நிறைய வழிமுறைகளை உபயோகித்து பார்த்திருக்கிறேன் எதிலும் என்க்கு முழுத் திருப்தி கிடைக்க வில்லை ஆனால் இன்று எதேச்சையாக தங்களின் பதிவு காணக்கிடைத்தில் மிக்க சந்தோஷம்...

  சிம்ப்ளி சூப்பர்ப், ரொம்ப எளிமையான வழிமுறை... எனது வலைத்தளத்தில் இதை வெளியிடலாமா?

  வாழ்த்துகளுடன்
  ஞானசேகர் நாகு

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்தையும் சொல்லுங்க. முடிந்தால் மறுமொழி கொடுக்கிறேன்.