இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

பிளாக் ஹெட்டெர் உருவாக்குதல் | Blog Header


நமது வலைப்பூவில் உள்ள தலைப்புப்படத்தை (Blog Header) எப்படிச் செய்திருக்கிறோம் என்று சுகு என்ற தோழர் ஒருவர் தன் மறுமொழியில் கேட்டிருந்தார். நானும் உடனடியாக ஒரு பதிவு தருவதாக பின்னூட்டம் இட்டிருந்தேன்.  விரைவாகச் செய்ய நேரம் கிட்டவில்லை. 4, 5 நாட்களாக பதிவு ஏதும் இட முடியவில்லை. அடுத்தப் பதிவாக அவர் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற முயற்சிதான் இந்தப் பதிவு.

இந்த ஒரு ஹெட்டரை உருவாக்க முதலில் அளவு (Size of the Header) சரியாக இட வேண்டும். என் வலைப்பூக்களில் எல்லாம் 910 பிக்சல்கள் அகலத்தை எப்போதும் தேர்ந்தெடுத்திருக்கிறேன். உயரம் நம் தேவைக்கேற்ப எவ்வளவு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

நான் இந்தக் காணொளியில் காட்டும் ஹெட்டரை உருவாக்க போட்டோஷாப் (Photoshop), கோரல் டிரா (Corel Draw) ஆகிய இரண்டு மென்பொருள்களைக் கையாண்டிருக்கிறேன். ஆனால் காணொளியில் போட்டோஷாப்பில் தயார் செய்திருந்த இமேஜூகளைப் (Images) பற்றி விளக்கவில்லை.

முதலில் ஒரு குளோப் படத்தை எடுத்துக் கொண்டேன். அதில் எனக்குத் தேவைப்படாத பகுதிகளை போட்டோஷாப் பயன்படுத்தி வெட்டி எடுத்தேன் (டிரான்ஸ்பேரன்ட் வெட்டுகள் (Transparent Cuts) உட்பட). வெட்டி முடித்த பிறகு அந்தக் கோப்பை (File) Png ஆக சேமித்தேன் (Save).

அடுத்து ஒரு மனிதன் உட்கார்ந்து பேப்பர் படிக்கும்படியான ஒரு படத்தை போட்டோஷாப்பில் ஓப்பன் செய்தேன். ரவுண்டாக அதை வெட்டினேன். வெட்டி முடித்த பிறகு அந்தக் கோப்பை (File) Png ஆக சேமித்தேன் (Save).
இப்போது எனக்குத் தேவையான இமேஜூகளை எனக்குத் தேவையான அளவுகளில் பயன்படுத்த சேமித்து வைத்துக் கொண்டேன். இனி கோரல்டிரா....
910 பிக்சல் அகலமும் 171 பிக்சல் உயரமும் கொண்ட ஒரு புதிய கோப்பை கோரல்டிராவில் ஓப்பன் செய்தேன். ஏற்கனவே வெட்டி வைத்திருந்த குளோப் படத்தை இடது கார்னரில் பிளேஸ் செய்தேன். மனிதன் பேப்பர் படிக்கும் இமேஜை வலது கார்னரில் பிளேஸ் செய்தேன். பிளாக் ஹெட்டரில் எனக்குத் தேவையான தலைப்பை தமிழில் எனக்குப் பிடித்தமான எழுத்துருக்களைக் கொண்டு தட்டெழுதிக் கொண்டேன். அதற்கு எபெக்டுகளைக் கொடுத்தேன்.

அடுத்து மொத்த கோப்புக்கும் முழுதாக ஒரு ரெக்டாங்கிளை (Rectangle) வரைந்தேன். F11 கொடுத்து பவுண்டெய்ன் பில்லாக மேலே நீலக் கலரும் கீழே வெள்ளை கலரும் உள்ளபடி அமைத்துக் கொண்டேன். இப்போது ஹெட்டர் இமேஜ் முழுமையாக முடிந்துவிட்டது. அதை பிற்பாடு பயன்படுத்திக் கொள்ள கோரல் டிரா டாக்குமென்டாக ஒரு கோப்பைச் சேமித்துக் கொண்டு, மற்றுமொரு கோப்பாக அந்த கோப்பை எக்ஸ்போர்ட் (Export) செய்து JPG சேமித்துக் கொண்டேன். இனி பிளாகர்....

பிளாகர் அக்கவுண்டுக்குள் சைன் இன் (Sign In) செய்து கொண்டேன்.  செட்டிங்க்ஸ்க்கு (Settings) சென்று வலைப்பூவின் ஹெட்டெர் டெக்ஸ்டை தட்டெழுதிக் கொண்டேன். பிறகு பிளாகர் லேயவுட் (Layout) ஆப்சனுக்குச் சென்று Header-ஐ எடிட் செய்து நான் தயார் செய்த படத்தை இட்டுக் கொண்டேன். அவ்வளவுதான். 

இப்படி ஒரே உரையாக இந்தப் பதிவைப் படித்தால் எவ்வளவு புரியும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆகையால் கீழுள்ள காணொளியைக் கண்டுவிட்டு பிறகு படித்தால் எளிதாகப் புரியும் என்று நம்புகிறேன்.


1 கருத்து:

 1. அன்புள்ள தோழருக்கு என் இனிய வணக்கங்கள்,
  சில நாட்கள் பனியின் காரணமாக வெளியூரில் இருந்ததால் என்னால் உங்களின் இப்பதிவினை உடனடியாக காண முடியவில்லை.

  முதலில் எனது கேள்விக்கு விளக்கமான பதிலினை காணொளியின் மூலம் அளித்த உங்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள் பல. நிச்சயம் அருமையான விளக்கம் என்னை போன்று புதிதாக இணையத்தளம் துவங்க இருப்பவர்களுக்கு உங்களின் இந்த பதிவு நிச்சயம் பயன்படும். இதனை ஒரு பதிவாக தந்து அனைவருக்கும் பயனுள்ளதாக செய்துள்ளீர்.
  எனக்கு சிறிது போட்டோ ஷாப் தெரியும் அதனை வைத்து முயற்சி செய்துவிட்டு உங்களுக்கு தெரிவிக்கின்றேன். மீண்டும் உங்களின் இந்த பயனுள்ள பதிவிற்கு மிக்க நன்றி.

  அன்புள்ள
  சுகுமாரன் நா

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்தையும் சொல்லுங்க. முடிந்தால் மறுமொழி கொடுக்கிறேன்.