இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

BW போட்டோவை கலராக மாற்ற - போட்டோஷாப்

vaijayanti-malavaijayanti-mala1
மேற்கண்ட படங்களைப் பாருங்கள். இப்படி ஒரு கருப்பு வெள்ளை புகைப்படத்தை போட்டோஷாப் பயன்படுத்தி எளிதாக வண்ணமயமாக மாற்றலாம்.
போட்டோஷாப்பில் உள்ள எளிய டூல்களை வைத்தே இந்தப் பணியைச் செய்யப் போகிறோம்.
முதலில் கருப்பு வெள்ளை படத்தை கிளீன் செய்து ஸ்மூத் ஆக்க வேண்டும்.
பழைய பதிவில் இதை எப்படிச் செய்வது என்று திரிஷா படத்தை வைத்து செய்து காட்டியிருந்தோம். அதே போல் இந்த கருப்பு வெள்ளை படத்தை ரெடி செய்து கொள்ள வேண்டும்.
படம் ரெடி ஆனவுடன். அந்தப் படத்தில் உள்ள அதி கருப்பு வண்ணங்களை மட்டும் செலக்ட் செய்து தனி லேயராக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு படத்தில் உள்ள தோல் பகுதியை மட்டும் செலக்ட் சற்று சிவப்பு வண்ணம் சேர்த்து நிஜமான தோல் அளவுக்குக் கொண்டு வர வேண்டும்.
படத்தில் உள்ள துணிகளைத் தனி லேயராக இட்டு அது அதற்குத் தனித் தனியாக வண்ணங்களைச் சேர்க்க வேண்டும்.
கடைசியாக உதடுகளுக்கு வண்ணம் சேர்க்க வேண்டும்.
கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள். இது சற்று பெரிய வீடியோதான் முடிந்தால் டவுன்லோடு செய்து கொண்டு பாருங்கள். இந்த வீடியோ கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் ஓடும்.

2 கருத்துகள்:

  1. இந்த முறையான நிற மாற்றத்திற்கு நீங்கள் எந்த போட்டோசாப் வெர்சனை உபயோகம் செய்தீர்கள். நான் போட்டோசாப் 7 -ல் பார்க்கும் போது சில ஆப்சன்கள் இல்லை நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே! நான் போட்டோஷாப் CS4 பயன்படுத்தியிருக்கிறேன். 7-ல் எந்த ஆப்சன்கள் இல்லை என்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. விளக்கமாகச் சொன்னால் பதிலளிக்க வசதியாக இருக்கும்.

      நீக்கு

உங்கள் கருத்தையும் சொல்லுங்க. முடிந்தால் மறுமொழி கொடுக்கிறேன்.