இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

புதன், 1 ஆகஸ்ட், 2012

லாசா டூல் - பேக்கிரவுண்ட் கட்டிங் - போட்டோஷாப்

லாசோடூல் என்பது டூல் பேலட்டில் இரண்டாவது இருக்கும்.

இதில் 3 வகை டூல்கள் இருக்கும். ஒன்று  லாசோ (Lasso) டூல், மற்றொன்று பாலிகனல் லாசோ (Polygonal Lasso) டூல், இன்னொன்று மேக்னடிக் லாசோ (Magnetic Lasso) டூல். இந்த மூன்று டூல்களும் ஒரே அடுக்கில் இருக்கும்.

முதலில் உள்ள லாசோ டூலைப் பயன்படுத்த L என்ற எழுத்தைத் தட்டுங்கள் அந்த டூல் செலக்ட் ஆகி இருக்கும். ஒரு முனையில் பிடித்து அழுத்தி அப்படியே லெப்ட் கிளிக்கை விடாமல் ஒரு சுழி (தேவையில்லாத டெலிட் செய்ய வேண்டிய பகுதியை மட்டும் குறிக்குமாறு) சுழித்து சரியாக ஆரம்ப இடத்திலேயே லெப்ட் கிளிக்கை ரிலீஸ் செய்தால் நமக்குத் தேவையான பகுதி செலக்ட் ஆகி இருக்கும்.
அந்தப் பகுதியை டெலிட் செய்ய கீபோர்டில் உள்ள டெலிட் என்ற பட்டனை அழுத்தினால் பேக்கிரவுண்ட் கலராக எந்த கலரை செலக்ட் செய்து வைத்திருக்கிறோமா அந்த கலரால் நிறையும் (Fill ஆகும்). இந்த டூலை வேகமாக ஒரு பகுதியை டெலிட் செய்யப் பயன்படுத்தலாம்.

இரண்டாவது டூலான பாலிகனல் லாசோ டூலை செலக்ட் செய்ய Shift + L அழுத்துங்கள். டூல் செலக்ட் ஆனதும் எந்த இடத்தில் ஆரம்பிக்க வேண்டுமோ அங்கு ஒரு லெப்ட் கிளிக் இடுங்கள். அடுத்த புள்ளியை நேர்கோட்டில் எங்கு இடவேண்டுமோ இட்டு அப்படியே அந்த பகுதியெல்லாம் தேவையில்லையோ அங்கெல்லாம் கிளிக்கிட்டு ஆரம்பித்த இடத்திலேயே முடித்து டெலிட் செய்யுங்கள்.

மூன்றாவது டூல் மேக்னடிக் லாசோ டூல். Shift + L அழுத்துங்கள், டூல் செலக்ட் ஆனதும் எந்த இடத்தில் ஆரம்பிக்க வேண்டுமோ அங்கு ஒரு லெப்ட் கிளிக் இடுங்கள். பிறகு அப்படியே கட் செய்ய வேண்டிய பார்டர்களை நோக்கி சாதாரணமாக இழுத்துச்செல்லுங்கள் செலக்டர் சரியான இடங்களில் ஒட்டிக் கொண்டு வரும். காந்தம் இரும்பை இழுப்பது போல பார்டர்கள் இந்த டூலின் முனையை இழுத்துக் கொண்டிருக்கும். இந்தட்டூலைப் பயன்படுத்தி தேவையில்லாத பகுதிகளை செலக்ட் செய்து பேக் கிரவுண்டை நீக்கலாம்.

இன்னும் விளக்கமாகப் பார்க்க கீழுள்ள வீடியோவை பிளே செய்யுங்கள்.

1 கருத்து:

உங்கள் கருத்தையும் சொல்லுங்க. முடிந்தால் மறுமொழி கொடுக்கிறேன்.