இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

லோகோ வரைவது எப்படி? | கோரல் டிரா

கோரல் டிராவைப் பயன்படுத்தி ஒரு எளிய லோகோவை (படத்தில் காட்டியிருப்பது போல) வரைவது எப்படி என்று இந்தப் பதிவில் விளக்க முயற்சித்துள்ளேன்.

நான் இங்கு காட்டியிருக்கும் லோகோ சிம்பிளாக யாருக்கு வேண்டுமானாலும் டிசைன் செய்து கொள்ளலாம். நானே இது போன்ற லோகோவை பல பேருக்குச் செய்து கொடுத்திருக்கிறேன்.

முதன்முதலில் நான் எனது வரைகலை அலுவல்களைத் தொடங்கிய காலத்தில் ( 5 வருடங்களுக்கு முன்பு) சிலர் இது போன்ற சிம்பிளான லோகாவைப் போடும்படி என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.
அப்போதெல்லாம் எனக்குத் தெரியாது இது இவ்வளவு எளிது என்று. நான் ''ஐயா! எனக்குத் தட்டெழுத மட்டும்தான் தெரியும், லோகோவெல்லாம் டிசைன் செய்யத் தெரியாது என்று சொல்லியிருக்கிறேன்.''  பலரிடம் எனக்கு எழுத்துருக்களை நேராகத்தான் அடிக்கத்தெரியும். திருப்பி அடிப்பது, வளைத்து அடிப்பதெல்லாம் எனக்குத் தெரியாது என்று வெட்கமே படாமல் சொல்லியிருக்கிறேன். இதுகூடத் தெரியாமல் நீயெல்லாம் ஏன் வரைகலைப் பணியைத் தேர்ந்தெடுத்தாய் என்று கேட்டவர்களும் உண்டு. ஆனால் இன்று லோகோக்களை டிசைன் செய்வதே எனது பெரும்பணி ஆகிவிட்டது.


கீழ்க்கண்ட வீடியோவில் நான் சிறிய கோடிட்டுத்தான் காட்டியிருக்கிறேன். ரோடு போடும் பெரிய பணி உங்களுடையது.


யூடியூபில் காண

2 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. சிறு பிழை ஏற்பட்டுவிட்டது. இப்போது வீடியோ லோட் ஆகும். ஏற்கனவே கூட யூடியூபில் காண என்ற லிங்கைச் சொடுக்கியிருந்தால், யூடியூபில் வீடியோவைக் கண்டிருக்கலாம்.

      நீக்கு

உங்கள் கருத்தையும் சொல்லுங்க. முடிந்தால் மறுமொழி கொடுக்கிறேன்.