இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

குயிக் செலக்ஷன் மற்றும் மேஜிக் வேன்ட் டூல் - போட்டோஷாப்


டூல் பேலட்டில் மூன்றாவது இருப்பது குவிக் செலக்ஷன் டூல் (Quick Selection tool). இந்த டூலை செலக்ட் செய்ய W என்ற எழுத்தை அழுத்தினால் போதும். இந்த டூலைப் பயன்படுத்தி தேவையில்லாத பேக்கிரவுண்டை கட் செய்யவோ அல்லது புதிய எபெக்ட்கள் கொடுக்கவோ செய்யலாம்.

ஒரு புள்ளியில் கிளிக் செய்து அப்படி தேவையான பகுதிகளில் இந்த டூலை வைத்து டிராக் செய்தால் போதும், போதுமான வரை நாம் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதத்தில் பகுதிகளை செலக்ட் செய்யும். சில பகுதிகளில் அளவுக்கு அதிகமாக செலக்ட் ஆகிவிட்டால். சற்று பிரஷின் அளவைக் குறைத்துக் கொண்டு Alt -ஐப் பிடித்தவாறு தேவையில்லாத பகுதிகளின் மேல் டிராக் செய்தால் சரியாகி விடும்.

எப்போதுமே நமக்குத் தேவையான பகுதியைவிட இது அதிகமாக செலக்ட் செய்து கொடுத்தால், பிரஷின் அளவை பிராகெட் பட்டனைப் ( [ பிரஷ சிறியதாக்க ] பிரஷை சிறியதாக்க )  பயன்படுத்தி சிறியதாக்கிக் கொண்டு மீண்டும் டிராக் செய்யுங்கள்.

இந்த டூலுக்கு அடியில் இருக்கும் அடுத்த டூல் மேஜிக் வேன்ட் டூல் (Magic Wand tool). இந்த டூலை செலக்ட் செய்ய Shift + W அழுத்துங்கள். இந்த டூல் குவிக் செலக்ஷன் டூலை விட சற்று வேறுபாடு உடையது. இதில் டாலெரன்ஸ் அட்ஜஸ்ட் செய்து நமது செலக்ஷன்களை நுணுக்கமாகச் செய்யலாம். டாலரன்ஸ் கம்மியாக வைத்தால் சிறிய பகுதிகளை செலக்ட் செய்யும். அதிகமாக வைத்தால் பெரிய பகுதிகளை செலக்ட் செய்யும். நம் தேவைக்கேற்ப டாலரன்சை கூட்டி குறைத்து தேவையான இடங்களில் Shiftஐ பிடித்தோ அல்லது Altஐ பிடித்தோ கிளிக் செய்தால் நாம் நுணுக்கமான செலக்ஷன்களைச் செய்யலாம்.

கீழ்க்கண்ட வீடியோவைப் பாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்தையும் சொல்லுங்க. முடிந்தால் மறுமொழி கொடுக்கிறேன்.