இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

சனி, 18 ஆகஸ்ட், 2012

விசிட்டிங் கார்டு செய்வது எப்படி | கோரல் டிரா

எளிய விசிட்டிங் கார்டு ஒன்றை, கோரல் டிரா மூலம் எப்படிச் செய்யலாம் என்பதை விளக்கவே இந்தப் பதிவை இடுகிறேன்.

மேலும் இந்தப் பதிவை, கோரல் டிராவில் இருக்கும் ஸ்மார்ட் பில் டூலை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை விளக்கவும் பயன்படுத்துகிறேன்.

இந்தப் பதிவின் மூலம், ஃபிரீ ஹேன்ட் டூல், ஷேப் டூல், ஷேடோ டூல், பவுண்டெய்ன் பில் டூல், டிரான்ஸ்பேனர்ஸி டூல் போன்றவற்றின் அறிமுக் கிடைக்கும்.

எந்த ஒரு மல்டி கலர் வேலைகளையும் செய்யும் முன்பே நாம் எந்த வண்ணத்தை அடிப்படை வண்ணமாக (Base Colour)ஆக வைக்கப் போகிறோம் என்பதை முதலிலேயே முடிவு செய்துவிட வேண்டும். இங்கு நாம் பச்சை வண்ணத்தைத்தேர்ந்தெடுத்திருக்கிறோம். 


பிறகு என்ன மாதிரி லேயவுட் இடப் போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். இங்கு, மேலும் கீழும் ஒரு ஆர்ச் போலவும், வலது புறத்தில் டெக்ஸ்டுகளும், இடது புறத்தில் லோகோவும் இருக்கும் வண்ணம் லேயவுட் தயார் செய்யப் போகிறோம்.

விசிட்டிங் கார்டு செய்வதற்கு சரியான அளவு கோரல் டிராவில் டிபால்டாகவே இருக்கும் பிஸ்னஸ் கார்டு அளவு ஆகும். அதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அடுத்து மேலும் கீழும் தேவைப்படும் ஆர்ச் தயார் செய்வதற்காக, முதலில் ஃபிரீ ஹேன்ட் டூலைப் பயன்படுத்தி ஒரு லைனை வரைந்து கொண்டு, ஷேப் டூலைப் பயன்படுத்தி அந்த லைனை வளைத்து விட வேண்டும். பிறகு முழு கார்டுக்கும் ஒரு செவக்கத்தை வரைந்து அந்த செவ்வகத்திற்கும் லைனுக்கும் இருக்கும் இடைவெளியில் ஸ்மார்ட் பில் டூலைப் பயன்படுத்தி எந்த கலர் வேண்டுமோ அந்த கலரைக் கொண்டு பில் செய்து கொள்ள வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு காணொளியைப் பாருங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்தையும் சொல்லுங்க. முடிந்தால் மறுமொழி கொடுக்கிறேன்.