இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

சனி, 19 ஜனவரி, 2013

தமிழ்த்திரட்டிகளின் ஓட்டுப்பட்டைகளை பிளாகர் வலைப்பூவில் இணைக்கதிரட்டிகளில் நமது பதிவை இணைத்தல் என்பது நமது வலைப்பூவிற்கு புதிய வாடிக்கையாளர்களை அறிமுகப்படுத்தும்.

அப்படித் திரட்டிகளில் இணைக்கும்பொழுது அந்தந்தத் திரட்டிகளில் மற்றவர்களால் ஓட்டுக்களும் இடப்படுகின்றன. மற்றவர்கள் படித்து நமக்கு அதிக ஓட்டுக்கள் விழும்பட்சத்தில் இன்னும் அதிகமான வாடிக்கையாளர்களை நாம் கவர முடியும்.

ஒவ்வொரு திரட்டியின் வலைத்தளத்திற்கும் சென்று நமது வலைப்பூப் பதிவின் முகவரியை இட்டு, குறிப்புகளை நிரப்புதல் என்பது அதிக நேரத்தைக் கொள்வதாக இருக்கிறது. ஆகையால் நமது வலைப்பூவில் உள்ளது போன்று பதிவைப் பகிர என்று ஒரு பொத்தானை ஒவ்வொரு பதிவின் அடியிலும் வைத்து, அந்த பொத்தானை அழுத்தும்போது, திரட்டிகளின் ஓட்டுப்பட்டைகள் தெரியும்வண்ணம் html code-ஐ வலைப்பூவின் டெம்பிளேட்டில் உள்ளிட்டு வைத்தால், அந்தந்த திரட்டிகளின் ஓட்டுப்பட்டையும் உங்கள் வலைப்பூவிலையே ஒவ்வொரு பதிவின் அடியிலும் தானாக அமைந்துவிடும்.

ஒவ்வொரு பதிவையும் இணைக்க நினைக்கும்போது, அந்தப் பதிவின் அடியில் இருக்கும் பதிவைப்பகிர பொத்தானை அழுத்தி, ஒவ்வொரு திரட்டியையும் சுட்டும்போது, அந்தப் பதிவின் பெயர், குறிப்புகள், படம் ஆகியன தானாகவே நிரம்பிவிடும். நாமும் தேவைப்பட்டால் எதை வேண்டுமானாலும் எடிட் செய்யும் வண்ணம் இருக்கும். நமக்கும் நேரம் மிச்சமாகும்.

இதில் இன்னொரு வசதி என்னவென்றால், ஏற்கனவே சில திரட்டிகளில் உறுப்பினராக இருப்பவர்கள் உங்கள் பதிவைப் படிக்கும்போது, அந்தந்த திரட்டிகளுக்குச் சென்று ஓட்டளிக்காமல், உங்கள் வலைப்பூவிலிருந்தே ஓட்டளிக்க முடியும்.

எப்படிப்பார்த்தாலும், இந்தத் திரட்டிகளின் ஓட்டளிப்புப் பட்டைகளை நமது வலைப்பூக்களில் இணைத்து வைத்திருத்தல் நமது வாடிக்கையாளர்களை அதிகரிக்கவே செய்யும்.

உங்கள் பதிவின் ஒழுங்கை இந்தத் திரட்டிகளின் பொத்தான்கள் அமைப்பு கெடுத்து விடக்கூடாது என்பதற்காகவே பதிவைப் பகிர என்று ஒரு பொத்தானை Show/Hide பாணியில் அமைத்திருக்கிறோம். அந்த பொத்தானை அழுத்தினால் மட்டுமே திரட்டிகளின் ஓட்டளிப்புப் பட்டைகள் காட்சி தரும். இனி செயல்முறை விளக்கம்

பதிவைப் பகிர பொத்தானை இணைக்க,

1.     முதலில் உங்கள் பிளாகர் அக்கௌண்டிற்குள் செல்லுங்கள்,

2.     டெம்ப்ளேட் என்ற தேர்வைச் செய்யுங்கள்,

3.     அதில் Edit Html என்ற தேர்வைச் செய்யுங்கள்.

4.     Expand Widget Template எனும் பெட்டியை டிக் செய்யுங்கள்.

5.     Ctrl+F கொடுங்கள். Search பாக்ஸ் ஓப்பன் ஆகும்.

6.    அந்த Search பெட்டியில்ல் <data:post.body/> என்ற பதத்தைத் தேடுங்கள்.

7.     கிடைத்தவுடன்  <data:post.body/> க்கு கீழே கீழ்கண்ட நிரலை உள்ளிட்டு Save செய்யுங்கள்.

<b:if cond='data:blog.pageType == "item"'>

<script src='http://iniyatamil.striveblue.com/bookmarks/evb/button.php' type='text/javascript'/>

தமி் நண்பர்கள்

<script src='http://dinapathivu.com/index.php?page=evb' type='text/javascript'/>

பதிை் பகி</b:if>

இப்போது உங்கள் வலைப்பூவிற்குச் சென்று, ஒவ்வொரு பதிவிலும் பாருங்கள். ஒவ்வொரு பதிவின் அடியிலும் பதிவைப் பகிர என்று ஒரு புதிய பொத்தான் அமைந்திருக்கும்.

1 கருத்து:

உங்கள் கருத்தையும் சொல்லுங்க. முடிந்தால் மறுமொழி கொடுக்கிறேன்.