இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

நீலக்கடல் பொன்னிறமாக மாற! | போட்டோஷாப்

இந்தக் கடற்கரை தங்கமாக ஜொலித்தால் எப்படி இருக்கும். நன்றாகத் தான் இருக்கும். அதை எப்படிச் செய்வது? சுலபம்தான். போட்டோஷாப் இருந்தால் போதும். 


நீலக்கடல்
இந்தக் கடற்கரை தங்கமாக ஜொலித்தால் எப்படி இருக்கும். நன்றாகத் தான் இருக்கும். அதை எப்படிச் செய்வது? சுலபம்தான். போட்டோஷாப் இருந்தால் போதும்.

எந்த ஒளி பின்னணி உள்ள படம் ஜொலிக்க வேண்டுமோ அந்தப் படத்தை போட்டோஷாப்பில் திறந்து  கொள்ளுங்கள். 

வலது கீழ் மூலையில் இருக்கும் லேயர் பேலட்டில் பேக்கிரவுண்ட் என்றிருப்பதை இரு சொடுக்கு சொடுக்கி தனி லேயராக மாற்றிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு Create new fill / adjustment layer என்று லேயர் பேலட்டில் இருக்கும் பொத்தானை அழுத்துங்கள். அதில் Gradient Map select செய்யுங்கள்.

அதன் பிறகு தெரியும் கிரேடியன்ட் எடிட்டரில் இடதுபுறம் சிவப்பும், வலதுபுறம் மஞ்சள் நிறத்தையும் தேர்ந்தெடுத்து ஓகே கொடுங்கள்.

இப்போது உங்கள் லேயர் பேலட்டில் புதிய லேயர் போன்ற ஒன்று பழைய லேயரின் மேல் இருக்கும். அதுதான் adjustment layer. அந்த லேயர் பேலட்டில் பிளெண்ட் மோடில் Soft light என்று தேர்ந்தெடுங்கள்.

அவ்வளவுதான் படம் தயார். தேவைப்பட்டால் Opacityஐ கூட்டிக் குறைத்து, உங்களுக்குத்தேவையான அளவில் வைத்துக் கொள்ளுங்கள். இதுபோன்று செய்தால் கீழ்க்கண்ட Effect கிடைக்கும்.
பொற்கடல்


 

2 கருத்துகள்:

உங்கள் கருத்தையும் சொல்லுங்க. முடிந்தால் மறுமொழி கொடுக்கிறேன்.