இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

வியாழன், 14 பிப்ரவரி, 2013

நமது தமிழ் கீபோர்டை நாமே உருவாக்குவது எப்படி?NHM Writer ஐப் பயன்படுத்தி எந்த என்கோடிங் கொண்ட எழுத்துருவையும் நாம் விரும்பிய விதத்தில் (TAM 99, Old Typewriting, Phonetic) வேண்டுமானாலும் தட்டச்சு செய்யலாம் என்பதை ஏற்கனவே நாம் இட்டிருக்கும் பதிவுகளில் சுட்டிக் காட்டியிருக்கிறோம்.

 திரு. Raguveeradayal Thiruppathi Iyengar அவர்கள், ".xmlகோப்புகளைப் பற்றிப் பல மாதங்களாக இணையத்தில் தேடி வருகிறேன். இன்று உங்கள் தளத்தைப் பற்றிப் பார்த்த பிறகு உங்களிடமிருந்து தேவையான தகவல்களைப் பெறலாம் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. உங்களை எப்படித் தொடர்பு கொள்வது? அல்லது ஒரு எழுத்துருவுக்கான கீபோர்டுக்கான .xml fileஐ எங்கிருந்து எப்படிப் பெறுவது என்பது குறித்து தங்கள் வலைத் தளத்திலேயே விவரமாக எழுதினால் அது பலருக்கும் பயன்படக்கூடும். உதாரணமாக எனக்கு nhm writerல் பயன்படும் வகையில் sanskrit 99 எழுத்துருக்கான phonetic keyboard xml file வேண்டும். " என்று எனது முகநூலுக்கு வந்து கேட்டிருந்தார்.
 
Sanskrit 99 எழுத்துருக்கான phonetic keyboard xml file கோப்பை நம்மால் (என்னால்) உருவாக்க முடியாது (நமக்கு சமஸ்கிருதம் தெரியாததால்). எனினும், சமஸ்கிருதம் அறிந்தவர்கள், அவர்கள் விரும்பும் Keyகளில் அவர்கள் விரும்பும் எழுத்துகள் வருமாறு NHM Writer-ல் ஒரு xml கோப்பால் அடுக்கிக் கொள்ள வழிகாட்ட முடியும். அது பின்வருமாறு.
 

மற்ற எழுத்துருக்களில் தட்டச்சு செய்ய! என்ற நமது பதிவில், தரவிறக்கிக் கொள்ள கொடுத்திருக்கும் தமிழ் எழுத்துருக்களுக்கான Tam 99 XML கோப்புகள் அனைத்தும் நான் அப்படி அடுக்கிக் கொண்டதே. (நாம் விரும்பும் எழுத்துருவைத் தேர்ந்தெடுத்து a என்ற எழுத்தைக் கீபோர்டில் தட்டினால் மானிட்டரில் தமிழில் அ என்ற எழுத்து வரவேண்டும், q என்ற எழுத்தைத் தட்டினால் ஆ என்ற எழுத்து வரவேண்டும். இது TAM 99 முறை.)


அப்படி XML கோப்புகளை உருவாக்க நமக்கு இரு மென்பொருட்கள் வேண்டும். அவை இலவசமாகவே கிடைக்கின்றன.

1. Character Map         


            இந்த மென்பொருளை நீங்கள் பதிவிறக்கக்கூட வேண்டியதில்லை. உங்கள் விண்டோஸ் ஓ.எஸ். உடனே இது வருகிறது. Start பட்டனை அழுத்தி Search programs and files என்ற சுட்டியில் Character map என்று அடித்து Enter தட்டினால் அந்த மென்பொருள் திறக்கும் (இது விண்டோஸ் 7ல்).


      Start பட்டனை அழுத்தி All Programsல் உள்ள Accessories டேபில் உள்ள System Toolsல் Character Map என்பதை அழுத்தினால் அந்த மென்பொருள் திறக்கும் (இது வின்டோஸ் எக்ஸ்.பியில்).

2. First Object XML Editor - பதிவிறக்க இங்கே சொடுக்குங்கள். (இலவச மென்பொருள்தான். பதிவிறக்க சுட்டி வேலை செய்யவில்லையெனில் http://www.firstobject.com/dn_editor.htm என்ற முகவரிக்குச் சென்று பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.)

இனி வருவனவற்றில் ஒவ்வொரு வரியையும் நின்று நிதானமாகப் படியுங்கள்

1. எழுத்துருக்களில் (Font) உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் (Character) ஒரு யூனிகோட் வேல்யு (Unicode Value) இருக்கும். அதை நாம் கேரக்டர் மேப் பயன்படுத்தித் தெரிந்து கொள்ள வேண்டும். (அதை எப்படி கண்டுபிடிப்பது என்று 5வது பாயிண்டில் சொல்லியிருக்கிறோம்.)

2. கீபோர்டில் ஒவ்வொரு பட்டனுக்கும் (கீ களுக்கும்) ஒரு கீ வேல்யு (Key Value) இருக்கும். அவற்றைக் கீழே படமாக கொடுத்திருக்கிறேன். பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அல்லது நான் தட்டச்சு செய்து வைத்திருப்பது போலவே தட்டச்சு செய்து கொள்ளுங்கள். அல்லது இங்கே சொடுக்கி நான் செய்த வேர்ட் கோப்பை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.3. மேற்கண்ட இரண்டையும் (எழுத்துருவின் யூனிகோட் வேல்யுவையும் கீ வேல்யுவையும்) இணைக்க ஒரு NHM Writerம் ஒரு XML கோப்பும் பயன்படும்.

அதை எப்படிச் செய்வது என இனி காண்போம்.

4. முதலில் எந்த எழுத்துருவில் தட்டச்சு செய்ய விரும்புகிறீர்களோ அந்த எழுத்துருவை கேரக்டர் மேப்பில் திறந்து கொள்ளுங்கள். (நான் இங்கு உதாரணத்திற்கு LT வகை எழுத்துருவை TAM 99ல் தட்டச்சு செய்ய Xml கோப்பை எப்படி உருவாக்குவது எனச் சொல்லப் போகிறேன். நீங்கள் உங்கள் விருப்பப்படி செய்யலாம்.)


5.கேரக்டர் மேப் படத்தைப் பாருங்கள் கேரக்டர் மேப்பில் LT வகை எழுத்துரு ஒன்றைத் திறந்து வைத்திருக்கிறேன். அதில் சிவப்பு வட்டம் போட்டிருப்பதைப் பாருங்கள். ! (ஆச்சரியக்குறி எழுத்தை) எழுத்தை நான் தேர்ந்தெடுக்கும்போது, கீழே சிவப்பு கட்டத்தில் பாருங்கள் அந்த எழுத்துருவின் யூனிகோட் வேல்யுவைக் தெரிகிறது. நமக்கு அந்த யூனிகோட் வேல்யு (U+0021)வேண்டும். இனி, ஆச்சரியக்குறி எழுத்துக்கு யூனிகோட் வேல்யுவைக் குறிப்பெடுத்துக் கொண்டது போல் அந்த எழுத்துருவில் உள்ள அனைத்து (ஒவ்வொரு) எழுத்துக்கும் யூனிகோட் வேல்யூவைக் கண்டறிந்து ஒரு வேர்ட் டாக்குமென்டில் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். நான் எப்படி நான்கு எழுத்துருக்களுக்கு குறிப்பெடுத்துள்ளேன என்பதை இந்த வேர்ட் டாக்குமென்டை பதிவிறக்கித் தெரிந்து கொள்ளுங்கள். அந்த டாக்குமெண்டைப் பார்த்தாலே தலை சுற்றும். பணி சற்று கடினமானதுதான். ஆதீத விருப்பம் இத்துறையில் இருந்தால்தான் இப்பணியைச் செய்ய முடியும்.

இனி மற்றுமொரு இமாலயப் பணி 

C:\Program Files\NHM Writer\Data\Tamil_Bamini_Tamil99 என்ற கோப்பை First Object மென்பொருளில் திறந்து பாருங்கள் (உதாரணத்திற்காக). கீழ்கண்டவாறு இருக்கும். 
அதில் File மற்றும் Editக்கு அடுத்து இருக்கும் View டேபிற்குச் சென்று Tree View என்பதில் இருக்கும் டிக் மார்க்கை எடுத்துவிட்டால் மேற்கொண்டு திருத்த கீழ்க்கண்டவாறு வசதியாக இருக்கும்.
மேலே இருக்கும் படத்தை உன்னிப்பாக கவனியுங்கள்.

<language>Tamil</language> அப்படியே விட்டுவிடுங்கள். கீழே Encodingல் Bamini என்றிருப்பதை LT என்று மாற்றிவிடுங்கள். Keyboard, LCID அப்படியே இருக்கட்டும். Authorல் உங்கள் பெயரை இட்டுக் கொள்ளுங்கள். Descriptionல் பாமினி என்ற வார்த்தை எடுத்துவிட்டு எல்டி என்று இட்டுக் கொள்ளுங்கள்.

<Data> என்ற தலைப்பின் கீழ் இருப்பனவற்றைப் பாருங்கள். ஒரு பெரிய பட்டியலே இருக்கும். அதில், 0B85 அ யூனிகோட் எழுத்தின் (லதா எழுத்துருவில் உள்ள) யூனிகோட் எண்ணாகும். 0B85 என்பது ஆ எழுத்தின் எண்ணாகும். அப்படியே அகர முதலியை நினைத்துக் கொள்ளுங்கள். சிவப்பு நிறத்தில் கட்டம் கட்டிக் காட்டப்பட்டிருக்கும் பகுதி Bamini Encodingல் உள்ள எழுத்துருக்களின் யூனிக்கோட் வேல்யு ஆகும். நீல நிறத்தில் கட்டம் கட்டிக் காட்டப்பட்டிருக்கும் பகுதி கீ போர்டின் கீ வேல்யுகள் ஆகும்.

நாம் மாற்ற வேண்டியது சிவப்பு கட்டத்திற்குள் இருக்கும் வேல்யுக்களையே. தற்போது அதில் இருப்பது Bamini Encodingக்கான யூனிகோட் வேல்யு, அதை நீக்கிவிட்டு இனி நாம் LT Encodingக்கான யூனிக்கோட் வேல்யுவை (மேலே 4வது பாயின்டில் குறிப்பெடுத்தோமே அந்த யூனிகோட் வேல்யுக்களை ஒவ்வொன்றாக மிகக் கவனமாக நிரப்ப வேண்டும் (நிரப்பும்போது எக்காரணம் கொண்டு < > குறிகள் அழிந்துவிடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்). முழுவது நிரப்பிவிட்ட பின்னர் File சென்று Save as கொடுத்து Tamil_LT_Tamil99 என்று சேமித்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான்.

இதுவும் ஒரு இமாலயப பணியே. அதிக விருப்பத்துடனும், அக்கறையுடனும், தெளிவுடனும் செய்தால்தான் ஒரு XML Fileஐ உருவாக்க முடியும். ஒரு XML கோப்பை உருவாக்க ஒரு வாரம் கூட ஆகும். ஒரு சிறிய தவறு இருந்தால் கூட NHM Writer-ல் அந்த XML கோப்பை Import செய்யும்போது Integrity Check Failed என்று வரும்.

NHM Writerல் அந்த XML கோப்பை Import செய்வது எப்படி என்பதை இந்தப் பதிவைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

எல்லோருக்கும் புரியும்படி சொல்லிவிட்டேனா என்பது தெரியவில்லை. (ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு இது பற்றியெல்லாம் எந்த அடிப்படையும் தெரியாது. ஏன், வரைகலை குறித்தும் எந்த அடிப்படையும் தெரியாது. நான் எந்த கணினி வகுப்புகளுக்கும் சென்றதில்லை. நான் படிக்கும்போது எனக்கு கணினி ஒரு பாடமாக இருந்ததில்லை. தேடலின் மூலமே இவற்றைக் கற்றேன். நாம் கற்க இவ்வளவு நாள் ஆனது. யாருக்கும் இவ்வளவு நாள் ஆகக்கூடாது என்பதற்காகத்தான் இந்த வலைப்பூவையே ஆரம்பித்தேன். ஆகையால், கோடிங் தெரிய வேண்டும், கம்ப்யூட்டர் வகுப்புகளில் கற்க வேண்டும் என்று நினைப்போர், என்னை கவனத்தில் கொள்ளுங்கள். ஏன் இவ்வளவு சொல்கிறேன் என்றால், இந்தப் பதிவில் வரும் XML கோப்பை உருவாக்குவது என்பது கடினமான பணியாக இருக்கும். அதைக்கண்ட யாரும் மிரளக்கூடாது என்பதற்காகத்தான். பொறுமையாக ஒவ்வொரு வரியாகப் படித்தால், அதன்படி செய்தால் இந்தப் பணி மிகவும் எளிதுதான்.)

வெற்றி பெற வாழ்த்துகள்.

பின்குறிப்பு: மேலே உள்ள படத்தில் நீல நிறப்பெட்டியில் இருக்கும் கீ வேல்யுக்களைத் திருத்தினால், ஒரு புதிய லேயவுட்டையே உருவாக்கலாம். தமிழ் தட்டச்சு என்பதே லவலேசமும் தெரியாதவர்களுக்காக, நான் ஒரு லேயவுட்டை TAB வகை எழுத்துருக்களுக்காக உருவாக்கினேன். அதன் கீபோர்ட் லேயவுட் இப்படித்தான் இருக்கும். இந்த லேயவுட்டில் கி அடிக்க வேண்டுமானால் க + இ அடிக்க வேண்டும். கீ என்றால் க + ஈ அடிக்க வேண்டும், கு அடிக்க வேண்டுமென்றால் க + உ அடிக்க வேண்டும். இப்படியே வரிசைக்கிரமமாக நினைத்துக் கொள்ளுங்கள்.


அதன் XML கோப்பை இங்கே தருகிறேன். தரவிறக்கி NHMல் இம்போர்ட் செய்து, TAB வகை எழுத்துருவில் தட்டெழுதிப் பாருங்கள். ஆனால் தமிழில் தட்டெழுத TAM 99 முறையே சிறந்தது.

இந்தப் பதிவில் ஆங்காங்கே ஏகப்பட்ட பதிவிறக்கங்களைக் குறிப்பிட்டிருக்கிறேன். எதையாவது விட்டுவிடப் போகிறீர்கள். அதனால் ஒருமுறை கீழே நான் கொடுத்திருக்கும் போல்டருக்குச் சென்று எல்லாவற்றையும் தரவிறக்கிவிட்டீர்களா என்று பார்த்துக் கொள்ளுங்கள். First Object மென்பொருளைத் தவிர்த்து ஏனைய பதிவிறக்கங்களும் ஒன்றாக இந்த எனது மீடியா ஃபயர் போல்டரில் கிடைக்கும்.
 

 

4 கருத்துகள்:

 1. வணக்கம். இந்த 63 வயதுக் கிழவனின் வேண்டுகோளை ஏற்று இவ்வளவு விரைவில் ஒரு அருமையான, புரிந்து செயல்பட எளிதான விளக்கவுரையினை அளித்தமைக்கு மிக்க நன்றி. நீங்களே குறிப்பிட்டிருக்கிறீர்கள். கடினமான ஒன்று என்று. ஆனால் தேவை என்று வரும்போது கடினமான விஷயங்களையும் கற்று செயல்படுத்தத்தானே வேண்டும்? உங்கள் வழிகாட்டுதல்களுடன் வெற்றி கிட்டும் என நம்புகிறேன். இணையத்தில் கிடைக்கும் தங்கள் மொபைல் எண் தவறு என்று வருகிறது. ஓரிரு நாள்களில் நேரில் வந்து நன்றி சொல்வேன்.
  தி. இரகுவீரதயாள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே! உங்களுக்கு வயது 63 ஆனாலும் உங்கள் தேடல் நிற்காமல் தொடர்கிறதே! நீங்கள் சத்தியமாக இளைஞர்தான். உங்கள் தேடலுக்கு மரியாதை கொடுத்து, உடனே பதிலளிக்க வேண்டுமென்றே உடனே பதிவிட்டேன்.

   நான் மற்ற வலைப்பூக்களில் கவனம் செலுத்திக் கொண்டிருந்ததால் இந்த வலைப்பூவைக் கவனிக்க நேரம் போதவில்லை. இப்படி யாராவது சந்தேகம் கேட்டு, அந்த சந்தேகத்திற்கு எனக்கு விடை தெரிந்தால், உடனே பதிவெழுதிவிடுவேன். அந்தவகையில் உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். இந்த வலைப்பூவைக் கவனித்த வைத்தமைக்காக.

   நீக்கு
 2. வணக்கம்
  இன்று வலைச்சரத்தில் உங்களுடைய வலைப்பபூ அறிமுகம்மானது சென்று பார்க்கவும் http://blogintamil.blogspot.com/2013/08/6_24.html?showComment=1377308895348#c7692767288255196790 வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே!

   நான் அவ்வலைப்பூவுக்குச் சென்று, வலைச்சரத்தின் ஆசிரியருக்கு நன்றி தெரிவித்தேன்.

   வலைச்சரத்தில் நமது வலைப்பூ குறித்து வந்த செய்தியை இங்கு வந்து தெரிவித்தமைக்கு நன்றி.

   அன்புடன்
   செ.அருட்செல்வப்பேரரசன்

   நீக்கு

உங்கள் கருத்தையும் சொல்லுங்க. முடிந்தால் மறுமொழி கொடுக்கிறேன்.