இந்த வலைப்பூவை விரும்புகிறீர்களா?

வெள்ளி, 10 மே, 2013

நல்ல போட்டோஷாப் டிசைனராக ஆக...!
போட்டோஷாப்பில் அதிகம் அறியப்படாத யுத்திகள் நிறைய உண்டு. அதில் சிலவற்றைப் பற்றிய அறிமுகத்தை இப்போது இங்கே பார்ப்போம்.


1. ரீபைன் எட்ஜ் (Refine edge)

            ஒரு செலக்ஷனைத் தேர்ந்தெடுத்துவிட்டு இந்த Refine edge கொடுத்தால் செலக்ஷன் எட்ஜூகளை நம்மைவிடத் திறம்பட இந்த டூலே செய்து கொடுத்துவிடும். அதைச் சொடுக்கும்போது அதன் கண்ட்ரோல்களை நாம் காணலாம். நமது தேவைக்கேற்ப அதை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.
 
     இந்த டூல் போட்டோஷாப்பின் மேல்பட்டையில் இருக்கும். ஒரு செலக்ஷதனைத் தேர்ந்தெடுத்தப்பின்னரே, இந்த டூல் கண்ணுக்குப் புலப்படும்.

2. ஆங்காங்கே இருக்கும் சின்ன அம்புக்குறிகள்

     இவை பெறும்பாலும் எல்லா பேலட்டுகளிலும் வலது ஓரத்தில் இருக்கும். இந்த அம்புக்குறிகளைச் சொடுக்கினால் நிறைய தேர்வுகள் புலப்படும்.


3. பிளெண்டிங் ஆப்ஷன்ஸ் (Blending options)

            ஒரு லேயரைக் ரைட் கிளக் செய்தால் வரும் Blending Options என்ற தேர்வில் பல எபெக்ட்களை ஒரு படத்திற்கு நாம் கொடுக்க முடியும். இதில் இருக்கும் தேர்வுகள் நமது படத்திற்கு அழகைக் கூட்டும்.


4. பில்டர் கேலரி (Filter gallery)

            மேலே செலக்ட் (Select) மற்றும் வியூ (view) ஆப்ஷன்களுக்கு நடுவே இருக்கும் பில்டர் (Filter) என்ற தேர்வில் நிறைய பில்டர்கள் இருக்கின்றன. இவற்றில் வரும் தேர்வுகளைப் பயன்படுத்தி ஒரு படத்திற்கு நிறைய எபெக்டுகளைக் கொடுக்க முடியும். இந்த பில்டர் கேலரியை நன்கு பயின்ற பிறகே பயன்படுத்த வேண்டும். பயிற்சி இல்லாமல் செய்தால் இதனால் ஒரு பயனும் இருப்பதாகத் தெரியாது.5. லேயர் பிளண்டிங் மோட் (Layer Blending Mode)

     லேயர் பேலட்டில் மேல்வரசையில் இருக்கும் பிளண்டிங் மோடைப் பயன்படுத்தி படங்களுக்கு நிறைந்த எபெக்டுகளைக் கொடுக்க முடியும்.


6. ஆக்ஷன் (Actions)

            மேல் பட்டையில் Window என்றிருக்கும் தேர்வில் Actions என்ற தேர்வைத் தேர்ந்தெடுத்தால் ஒரு பேலட் திறக்கும். அந்தப் பேலட்டில் ஏற்கனவே செய்திருந்த சில கடினமான செயல்களை Record செய்து வைத்திருக்கிறார்கள். அதைப் பயன்படுத்தி, நமது படத்திற்கும், நாம் தட்டச்சு செய்யும் எழுத்துகளுக்கும் நிறைய எபெக்டுகளைக் கொடுக்க முடியும்.மேற்கண்ட அனைத்தையும் ஒரு நல்ல டிசைனர் தெரிந்து வைத்திருத்தல் அவசியம். ஏதாவது கம்ப்யூட்டர் கோச்சிங்குக்குச் சென்றுதான் அவற்றைப் பயில வேண்டும் என்பது இல்லை. இவற்றால் என்ன பயன் என்று நாமே சோதித்துப் பார்த்தாலே போதும். அந்த சோதனை செய்வதற்கு நிறைய பொறுமையும், ஆர்வமும் அவசியம்.

8 கருத்துகள்:

 1. வணக்கம்...

  வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/08/6_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
 2. சின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)

  (Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே!

   Word verificationஐ நீக்கிவிட்டேன்.

   வந்து கருத்திட்டமைக்கு நன்றி.

   நீக்கு
 3. வலைச்சரத்தில் தங்கள் அறிமுகம் கண்டு இங்கு வந்தேன் எனக்கு தேவையானவிசயங்கள் நிறைய இருக்கின்றன பயன்பெற கிடைத்த சந்தர்ப்பத்தை இட்டு மகிழ்கிறேன்

  வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  பதிலளிநீக்கு
 4. i want to learn photo shop designing which version i can download and i am new to designing field then which version is suitable for me in adobe photo shop? pls reply me sir

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே! நான் ஆரம்பித்தது போட்டோஷாப் 5ல் ஆரம்பித்தேன்.
   அது அப்போது லேட்டஸ்ட்.

   ஆகையால், லேட்டஸ்ட் வெர்ஷனிலேயே ஆரம்பியுங்கள். CS6 வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

   நீக்கு

உங்கள் கருத்தையும் சொல்லுங்க. முடிந்தால் மறுமொழி கொடுக்கிறேன்.